Sunday , May 19 2019
Home / விளையாட்டு செய்திகள் / கால்பந்து ரசிகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி
கால்பந்து ரசிகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி

கால்பந்து ரசிகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி

ஈகுவடோரில் கால்பந்து ரசிகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

பாசிலோனா எஸ்.சி. கால்பந்து அணி பங்கேற்ற போட்டி (Cuenca) குயென்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியைக் கண்டு ரசிப்பதற்காக (Guayaquil) ஃகுவாயாஃகில் நகரில் இருந்து ஏராளமான ரசிகர்கள் பலர் பேருந்தில் சென்று இருந்தனர்.

போட்டி முடிந்து அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த பஸ் நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர். முன்னால் சென்ற வாகனங்களை முந்த முயன்ற போது விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.