Monday , May 20 2019
Home / உள்நாட்டுச் செய்திகள் / பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 வருட சிறை

பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 வருட சிறை

பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப்பிற்கு பாக்கிஸ்தான் நீதிமன்றம் பத்துவருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

லண்டனில் உள்ள நான்கு ஆடம்பர தொடர்மாடிகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

நவாஸ்செரீப்பின் மகள் மர்யம் செரீப்பிற்கு ஏழு வருட சிறைத்தண்டiiயை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டுகளிற்காகவும் விசாரiணைகளிற்கு ஒத்துழைக்காததற்காவும் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியுடன் தற்போது லண்டனில் தங்கியிருக்கும் செரீவ் இந்த தீர்ப்பை அரசியல் நோக்கங்களை கொண்டது என வர்ணித்துள்ளார்.