Monday , May 20 2019
Home / உள்நாட்டுச் செய்திகள் / வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் கைது

வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் கைது

வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா பகுதியைச் சேர்ந்த 61 மற்றும் 33 வயதுடையவர்ளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 64 இலட்சம் (இலங்கை மதிப்பு) ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 10800 பிரித்தானிய பவுன்டுகளும், 16650 யூரோக்களும், 22000 சவுதி ரியாலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் பணத்தை பறிமுதல் செய்த பின்னர் குறித்த இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.