Monday , May 20 2019
Home / அறிவியல் / காட்டுக்கே ராஜா! சிங்கத்தின் ஆயுட்காலம் தெரியுமா?

காட்டுக்கே ராஜா! சிங்கத்தின் ஆயுட்காலம் தெரியுமா?

டிஎன்பிஎஸ்சி மட்டுமல்ல எந்தவிதமான போட்டித்தேர்வாக இருந்தாலும் எப்படி அணுகவேண்டும் என்ற ஒரு தெளிவு உங்களிடத்தில் இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக தேர்வில் எளிமையாக வெற்றி பெறலாம். போட்டித் தேர்வுகளை பொறுத்தமட்டில் “வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு” என்ற பழமொழிக்கு ஏற்ப தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியது மிக அவசியம் ஆகும்.

1. வாட்ஸ்அப் (Whatsapp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? விடை: 2009 (தலைமையகம் கலிபோர்னியா) விளக்கம்: 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton), ஜேன் கோம் (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் வெறும் 55 பணியாளர்களை கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத கணக்கெடுப்பின் படி இதை 900 மில்லியன் (90 கோடி) மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

2. உலகில் ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

விடை: மலேசியா விளக்கம்: தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். மலேசியாவில் அண்மையில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகதீர் முகமது வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். உலகின் 4வது ஷாப்பிங் சிட்டியாக மலேசியா விளங்குகிறது.

3. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

விடை: 2004 விளக்கம்: ஜூலை 24, 2004 முதல் அப்போதய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ஆர் சி லகோத்தியால் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு அரு. லக்சுமணன், மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் , மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், முன்னிலையில் துவக்கிவைக்கப் பட்டு இயங்கி வருகிறது.

4. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?

விடை: தென்னாப்பிரிக்கா விளக்கம்: தென்னாப்பிரிக்கா ஆப்பிரிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நாடாகும். ரக்பி யூனியன் மற்றும் கிரிக்கெட் போன்றவை தென்னாப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான விளையாட்டுக்கள்.

5. உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவது எந்த நாளில்?

விடை: மார்ச் 22 விளக்கம்: மார்ச் 22-ம் தேதி ‘உலக தண்ணீர்தினம்’ கொண்டாடப்படுகிறது. 1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47வது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது.

நீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும்தான் உலக தண்ணீர் தினத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

6. செபியின் தலைவராக எம். தாமோதரன் பதவி வகித்த ஆண்டு?

விடை: 18 பிப்ரவரி 2005-18 பிப்ரவரி 2008 விளக்கம்: செபி என்று அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு. மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இவ்வமைப்பு செயல்படுகிறது.

7. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது? விடை: கொல்கத்தா பல்கலைக்கழகம் விளக்கம்: கொல்கத்தா பல்கலைக்கழகம், அப்போதைய கல்கத்தா ஜனவரி 24,1857ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் தொன்மையான பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். தெற்கு ஆசியாவிலேயே பல்வேறு துறைகளைக் கொண்ட முதல் பல்கலைக்கழகம் இது.

8. உலகில் காகம் இல்லாத நாடு எது?

விடை: நியூசிலாந்து விளக்கம்: நியூசிலாந்து பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்குத் தீவு, மற்றும் தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. டச்சு பயணி ஏபெல் டாஸ்மான் 1642 ஆம் ஆண்டில் நியூசிலாந்தைக் கண்டுபிடித்து அதற்கு Staten Landt எனப் பெயரிட்டார்.

9. உப்பை அதிகம் விரும்பி சாப்பிடும் விலங்கினம் எது?

விடை: முள்ளம் பன்றி. விளக்கம்: முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது. தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், (Porcupine) ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் விலங்குகளாகும். முள்ளம்பன்றிகளின் கர்ப்ப காலம் 240 நாட்கள். பொதுவாக வருடத்திற்கு ஒரு தடவை 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும்.

10. காட்டுக்கே ராஜா என உருவகப்படுத்தப்படும் சிங்கத்தின் ஆயுட்காலம் தெரியுமா?

விடை: 15 ஆண்டுகள் விளக்கம்: சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும் திறன் கொண்டது. லேபர் பீரோவில் 875 காலியிடங்கள்! உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் |

தேர்வு, tnpsc, competitive exams English summary TNPSC Model Question Paper with Answers ஐசியூவில் போராடும் குறை மாதக் குழந்தை.. நீங்கள் நினைத்தால் உதவலாம்! Driver’s premature baby girl waits for treatment in NICU RECOMMENDED STORIES Desipearl கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை… விண்ணப்பிக்க ஜூலை 28 கடைசி! Know All About Railways. News, Updates & More. Visit Now சென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்! அழைப்பு உங்களுக்குத்தான்… இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை! மதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்! Be part of India’s largest native ad platform. Join Us Advertisement அப்பாயின்மெண்ட் ஆர்டர்ல சைன் பண்ணும் முன் கண்டிப்பாக கவனிக்க … காட்டுக்கே ராஜா! சிங்கத்தின் ஆயுட்காலம் தெரியுமா?

டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி! Seeking IFSC Code of Your Indian Bank. Get It in 3 Clicks ஆவின் புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூலை 21 கடைசி! டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!