Monday , May 20 2019
Home / அறிவியல் / ஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுள் எவ்வளவு குறையும் தெரியுமா?

ஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுள் எவ்வளவு குறையும் தெரியுமா?

ஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுளில் பதினான்கு நிமிடங்களை இழக்காதீர்கள். அதே சமயத்தில் நீங்கள் பிடிக்கும் புகையால் உங்களுக்கு அருகிலுள்ள குடும்ப உறுப்பினர்களோ அல்லது நண்பர்களோ அல்லது பொதுமக்களோ அவர்களும் இந்த பதினான்கு நிமிடங்களை புகைப்பிடிக்காமலேயே இழக்கின்றார்களாம்.

அதனால் புகைப்பிடிக்காதீர்கள்.புகைப்பிடிக்கவும் அனுமதிக்காதீர்கள்.என்று உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற விழிப்புணர்வு விழாவில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மே மாதம் 31 திகதி உலக புகையிலை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கபடுகிறது.

ஒவ்வொரு சிகரெட்டிலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்கள் உள்ளன.இதில் ஐம்பது நச்சுப்பொருட்கள் புற்றுநோயை உருவாக்கும் தன்மைக்கொண்டவை. தொடர்சசயாக புகைபிடிக்கும் பழக்கமுடையவர்கள், தன்னுடைய நண்பர்களிடமிருந்து சிகரெட்டை வாங்கிப்புகைப்பவர்கள், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு என்று எல்லை வகுத்துக்கொண்டு புகைப்பவர்கள், என அனைவருக்கும் பக்கவாதம்,மாரடைப்பு, பார்வைத்திறன் குறைபாடு,
வாய்,நுரையீரல்,குடல் மற்றும் மூச்சுக்குழாய் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் போன்ற பாதிப்புக்கள் ஏற்படும்.

புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்களின் ஆயுள் பாதியாக குறையும். புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் அனைத்து பாதிப்புக்களும்,நோய்களும்,புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும் ஏற்படும்.இன்றைய திகதியில் தெற்காசியா முழுவதும் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்களின் எண்ணிக்கை  40% இருந்து 31%ஆக குறைந்து இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. இந்நிலை மேலும் குறைய வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.