Sunday , May 19 2019
Home / விளையாட்டு செய்திகள் / வெறும் 17 பந்துகளில் அரைசதம்:சாதனை படைத்த இளம் வீரர்

வெறும் 17 பந்துகளில் அரைசதம்:சாதனை படைத்த இளம் வீரர்

ஐபிஎல் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்ததில்,மும்பை அணி வீரர் இஷான் கிஷன் புதிய சாதனை படைத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன்,நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 21பந்துகளில்,5பவுண்டரிகள்,6சிக்ஸ்டர்களுடன் 62 ஓட்டங்கள் எடுத்து அசத்தனார்.

இதில் குல்தீப் யாதவின் ஒரு ஓவரில்,தொடர்ந்து 4 சிக்ஸ்ர்கள் அடித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்தார்.

இந்தப் போட்டியில் அவர் 17 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார்.இதன் மூலம்,இந்த சீசனில் அதிவேக அரைச்சதம் அடித்தோர் பட்டியலில் இஷான் கிஷன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுல் 14 பந்துகளிலும்,கொல்கத்தா அணி வீரர் சுனில் நரேன் 17 பந்துகளிலும் அரைசதம் அடித்துள்ளனர்.