Monday , May 20 2019
Home / மருத்துவம் / நோய் எதிர்ப்பு சக்தியை பெற தினமும் தேன்

நோய் எதிர்ப்பு சக்தியை பெற தினமும் தேன்

தேனி்ல் உள்ள மணம் போவதற்காக இரும்பை காய வைத்து அதை தேனில் வைப்பார்கள் இது கொஞ்சம் நீர்த்திருக்கும்.
இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சாத தேன்,மஞ்சளாக கெட்டியாக இருக்கும். இதனை ஆண்டுக்கணக்காக வைத்திருந்தாலும் கூடாது. அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு குருதி சுத்தியும்,குருதி விருத்தியும் ஏற்படும்.
நரம்புத்தளர்ச்சியும் நீங்கி விடும்.என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்த வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தினசரி ஒரு கரண்டி தேன் சாப்பிடலாம். தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி,குமட்டல்,ஜலதோஷம்,தலைவலி கணமாகும்.
தேனும்,முட்டையும்,பாலும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா உபாதையி்ல் இருந்து தப்பிக்கலாம். தேனும்,வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும்.
ஊதைச்சதை குறையும். உடல் உறுதி அடையும். சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு,எலுமிச்சை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்தீர்களானால் நெஞ்செரிச்சல்,மலச்சிக்கல்,தும்மல் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும் மருந்து தயார்.
நெய்யையும்,தேனையும் சம அளவு சேர்த்தால்,அது விஷமாக ஆகிவிடும்.மருந்து சாப்பிடும் போது சில சமயம் இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும்.அப்படி சாப்பிடும் போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். அரை அவுன்