Monday , May 20 2019
Home / நிகழ்வுகளில் தொகுப்பு / கிளிநொச்சியில் பண்பாட்டு விழா

கிளிநொச்சியில் பண்பாட்டு விழா



வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்டசெயலகமும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடத்திய மாவட்ட பண்பாட்டு விழா கிளிநொச்சியில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்றது. அன்றைய தினம் மாலை 2.30மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் கிளிநொச்சி மாவட்டச்செயலாளரும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளருமான உடுவைஎஸ்.தில்லைநடராசா கலந்து கொண்டார்.
மேலும் வடமாகாணசபை உறுப்பினர் ப.அரியரத்தினம்,கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர்கள்,பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில் நாதஸ்வர இசையுடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.நிகழ்வில் கலைஞர்கள் பலரும் மதிப்பளிக்கப்பட்டனர்.