Sunday , May 19 2019
Home / சமையல் / கீரைப் பொரியல்

கீரைப் பொரியல்

தேவையான பொருட்கள்

கீரை-1கட்டு
பயறு-1கோப்பை
தேங்காய்(து௫வியது)-1தேக்கரண்டி
எண்ணெய்-1தேக்கரண்டி
கடுகு-1தேக்கரண்டி
வெள்ளைஉழுத்தம்பருப்பு-1தேக்கரண்டி
செத்தல் மிளகாய்-2

செய்முறை

கீரையை மண் போக அலசி சிறு துண்டுகளாக நறுக்கவும்
பாசி பருப்பைச்சுண்டல் பதத்திற்கு(ஒரு கிண்ணத்திற்கு ஒரு குவளை தண்ணீர் விட்டு )அவித்துக்கொள்ளவும்.
ஒரு சட்டியில் எண்ணை விட்டு தாளிக்கக் கொடுக்கப்பட்ட பொருட்களை தாளி்த்துக்கொண்டு கீரையைப்போட்டு வேகவடவும். பாதிவெந்தபிறகு உப்பு போடவும்.
தனியொரு சட்டியில் வெந்தபாசிப்பருப்பை உதிர்க்கவும்.
கீரையை வெந்த பிறகு பாசிப்பருப்பையும் சேர்த்து ஒன்றாக வதக்கவும்.
தேங்காய் துருவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி அலங்கரிக்கவும்.
சுவையான கீரைப்பொரியல் தயார்.