Sunday , May 19 2019
Home / அறிவியல் / அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக 11 வயதுச் சிறுமி!!
அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக 11 வயதுச் சிறுமி!!

அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக 11 வயதுச் சிறுமி!!

அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக 11 வயதுடைய சிறுமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டிற்கான Discovery Education 3M விஞ்ஞானி சவால் போட்டியில் முதல் பரிசை அவர் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் Lone Tree, Colorado பகுதியை சேர்ந்த Gitanjali Rao என்ற சிறுமியே இந்த பரிசை வென்றுள்ளார்.

தண்ணீரில் காரீயம் (lead) கலந்திருப்பதைக் கண்டறிய அவர் உருவாக்கியுள்ள புதிய கருவியான டெத்ஸிற்காக (Tethys) இந்த விருதை அவர் வென்றுள்ளார்.

அதற்கமைய 25,000 அமெரிக்க டொலர் பரிசு தொகையும், அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி எனும் விருதும் இந்த போட்டியில் உள்ளடக்கப்பட்டது.இதில், Gitanjali என்ற சிறுமிக்கு முதற்பரிசு கிடைத்துள்ளதுள்ளதுடன் அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாகவும் தெரிவாகியுள்ளார்.

அதற்காகவே இந்த கருவியை உருவாக்கினேன். பல முறை இதனை உருவாக்கும் முயற்சியில் தோல்வியடைந்தேன். எனினும் அந்த தோல்வியில் கற்றுக் கொண்ட விடயங்கள் ஊடாக வெற்றியை பெற்றேன். இதனால் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கிறேன்” என இளம் விஞ்ஞானி Gitanjali சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.