Sunday , May 19 2019
Home / இன்று வவுனியா / ஏ9 வீதியில் தலைகீழாகக் கவிழ்ந்த பாரவூர்தி..!
ஏ9 வீதியில் தலைகீழாகக் கவிழ்ந்த பாரவூர்தி..!

ஏ9 வீதியில் தலைகீழாகக் கவிழ்ந்த பாரவூர்தி..!

இன்று அதிகாலை ஏ9 வீதியின் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அம்பாறையிலிருந்து கிளிநொச்சி நோக்கி செங்கற்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அதன் வில்லுத்தகடு உடைந்தமையாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

எனினும் வாகன சாரதி மற்றும் பாரவூர்தியில் பயணித்த உதவியாளருக்கு எந்தவித காயமும் இன்றி தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்