Sunday , May 19 2019
Home / இன்றைய நிகழ்வுகள் / உலகில் சிறந்த விமான சேவை! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னிலையில்
உலகில் சிறந்த விமான சேவை! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னிலையில்

உலகில் சிறந்த விமான சேவை! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னிலையில்

உலகின் முதன்மை விமான வழங்கும் நிறுவனங்களில், ஸ்ரீலங்கன் விமான சேவை ஐந்தாமிடத்தை பிடித்துள்ளது.

உலக விமானங்கள் தொடர்பான புதிய புள்ளி விபரத்திற்கமைய, இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்திற்குள் சிறந்த செயல்திறன்களை வெளிப்படுத்திய உலகின் 40 முதன்மை விமான நிறுவனங்களுக்குள் ஸ்ரீலங்கன் விமான சேவை 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் செயல் திறன் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.

நிலையான மற்றும் நீண்டகால வெற்றியை கைப்பற்றி கொள்வதற்காக தனித்த தொழில்முறை வர்த்தக திறன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.