Sunday , May 19 2019
Home / சமையல் / ஃப்ரூட் பாப்ஸிக்கல்
ஃப்ரூட் பாப்ஸிக்கல்

ஃப்ரூட் பாப்ஸிக்கல்

என்னென்ன தேவை?

தர்பூசணி – ஒரு கப்
ஸ்ட்ராபெர்ரி – 8
க்வி பழத் துண்டுகள் – ஒரு கப்
திராட்சை பழம் – ஒரு கப்
தேங்காய்ப்பால் – கால் கப்
சுகர் பவுடர் – சிறிது

எப்படிச் செய்வது?

தர்பூசணி பழத்துண்டுகள் ஒரு கப் எடுக்கவும். சில ஸ்ட்ராபெர்ரி பழங்களை சேர்க்கவும். மிக்ஸியில் அடிக்கவும். க்வி பழத் துண்டுகளை பாப்ஸிக்கல் மோல்டுக்குள் போடவும். தர்பூசணி-ஸ்ட்ராபெர்ரி பழக்கூழை பாதி நிரப்பவும். திராட்சை பழங்களை மோல்டுக்குள் போடவும். 30 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைத்து உறைய வைக்கவும். கால் கப் தேங்காய்ப்பாலில் 1 டீஸ்பூன் சுகர் பவுடரை கலக்கவும். இரண்டாவது லேயராக தேங்காய்ப்பாலை நிரப்பவும். மீண்டும் நான்கு மணி நேரம் ஃப்ரீஸ் பண்ணவும். வெதுவெதுப்பான நீரில் போட்டு தனியாகப்
பிரிக்கவும். சம்மருக்கேற்ற ஃப்ரூட் பாப்ஸிக்கல் ரெடி.