Sunday , May 19 2019
Home / விவசாயம் / மீனுக்கு உணவாக மாறும் கோழி கழிவுகள்
மீனுக்கு உணவாக மாறும் கோழி கழிவுகள்

மீனுக்கு உணவாக மாறும் கோழி கழிவுகள்

சென்னையில் தினமும் 5 ஆயிரம் டன்னுக்கு மேல் குப்பைகள் குவிகிறது. இந்த குப்பைகளுடன் கோழி கழிவுகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசும்.

கோழிக்கழிவுகளை அப்புறப்படுத்துவதே கோழிக் கடைக்காரர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

தொழில்நுட்பத்தின் மூலம் அதற்கும் மாற்று ஏற்பாடு வந்து விட்டது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது போல் கோழிக் கழிவில் இருந்து மீன்களுக்கான புரோட்டீன் உணவு தயாரிக்கப்படுகிறது.

இதற்கான தொழிற்சாலை மாதவரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொதிகலன்களுடன் கூடிய ராட்சத எந்திரம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையை நிர்வகிக்கும் என்ஜினீயர் ராய் கூறியதாவது:–

தினமும் சுமார் 15 டன் வீதம் மாதம் 450 முதல் 500 டன் கோழி கழிவுகள் நகர் முழுவதிலும் இருந்து சேகரிக்கப்படுகிறது.

சேகரிக்கப்படும் கோழிக் கழிவுகள் 140 டிகிரி வெப்பத்தில் வேக வைக்கப்படும். பின்னர் வறுத்து பொடியாக்கி புரோட்டீன் உணவு தயாரிக்கப்படுகிறது. மாதம் 150 டன் உணவு தயாராகிறது.

இந்த உணவு மீன்களுக்கு குறிப்பாக இறால் பண்ணைகளுக்கு உணவாக செல்கிறது.

இந்த மறுசுழற்சி மூலம் சென்னையில் கோழிக்கழிவுகளால் ஏற்படும் சுகாதார கேடு தடுக்கப்படுகிறது என்றார்.