Monday , May 20 2019
Home / முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

சவுதியை பின்பற்றும் சீனா : பொது அரங்கில் அதிரடி தண்டனை

சவுதி அரேபிய நாடு குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில் பெயர் பெற்றது. ஆண், பெண் என்ற பாகுபாடின்றி தண்டனை வழங்க்கப்படும். இந்த பட்டியலில் தற்போது சீனாவும் சேர்ந்துள்ளது. சீனாவில் குவாங் டாங் மாகாணத்தில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 10.4 தொண் அளவுக்கு போதைமருந்து பொலிஸாரால்  கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய சுமார் 16,000 பேர் ... Read More »

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது அமெரிக்கா!!!

ஜெருசலேம் விவகாரம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது. 1948ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசம் வந்தது. அதன்பிறகு 1967ஆம் ஆண்டு  நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் ... Read More »

வைரலாக பரவும் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட காணொளி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ காணொளியை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார். 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காணொளியில் ஜெயலலிதா வைத்தியசாலை கட்டிலில் இருந்தபடி பழச்சாறு அருந்துவது போல் காட்சிகள் உள்ளது. வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், ... Read More »

ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் கொழும்பு யாசகர்களின் நிலை….

கொழும்பில் யாசகம் பெறுவோர் தொடர்பாக எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதலாம் திகதியின் பின்னர் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக தெரிவித்தார். இம் மாத இறுதிக்குள் கொழும்பில் யாசகம் பெறும் அனைவரும் கொழும்பு மாநகர சபையின் நற்காரியங்களுக்கான ஆணையாளரை சந்திக்க வேண்டும் எனவும் அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட யாசகர்கள் அனைவரும் புணருத்தாபன நடவடிக்கைகளுக்காக ஆட்படுத்தப்படுவர் ... Read More »

கொழும்பிற்குள் நுழைவோர் அவதானம் !!!

கொழும்பு – புறக்கோட்டை பகுதிக்கு பொருள் கொள்வனவிற்காக வரும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு புறக்கோட்டை பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். பண்டிகை காலங்களில் புறக்கோட்டை நகர் புறத்தில் ஆடை, ஆபரண கொள்வனவு மற்றும் பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் கொள்ளையடிப்பதற்காக பெண்கள் குழு ஒன்று கொழும்பில் ஊடுறுவி இருப்பதால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு மேலும் பொலிஸார் ... Read More »

” தேசிய நல்லிணக்கத்திற்கான பொறுப்பினை நிறைவேற்றுதல் நத்தார் பண்டிகையின் உறுதியாக அமைதல் வேண்டும்”

கிறிஸ்தவ சமயம் மட்டுமன்றி ஏனைய சகல சமயங்களும் சமய சகவாழ்வுடன் கூடிய சமாதானம் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதற்கே வழிகாட்டுகின்றன என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய நல்லிணக்கத்திற்கான பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுதலே இந்த நத்தார் பண்டிகையின் உறுதிமொழியாக அமைதல் வேண்டுமென தெரிவித்தார். கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட நத்தார் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ... Read More »

மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட ‘சிறிலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியது

எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ‘சிறிலங்கா சுதந்திரக்கட்சி’  இன்று காலை 11 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக மன்னார் மாவட்ட முகவராக நியமிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தலைமையில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள், ... Read More »

சுற்றாடல் பேரவையின் நடவடிக்கைகளை பலப்படுத்துவது அவசியம் : ஜனாதிபதி

தேசத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சுற்றாடல் பாதுகாப்பிற்காக நாம் மேற்கொள்ளவேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய ஜனாதிபதி, சுற்றாடல் பாதுகாப்பிற்காக தேசிய திட்டமொன்றின் அடிப்படையில் செயற்பட்டு அந்த இலக்குகளை அடைந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார். மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய சுற்றாடல் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் ... Read More »

இலவச பாடப்புத்தகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்குவதை அரசாங்கம் இடைநிறுத்தியிருப்பதாக சிலர் மேற்கொண்டுவரும் பிரசாரத்தில் எந்த உண்மையுமில்லையென கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.இலங்கசிங்க தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக 410 வகைகளில் 43 மில்லியன் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்களை விநியோகிப்பதற்காக அரசாங்கம் ஆண்டு தோறும் சுமார் 4 பில்லியன் ரூபாவை செலவிடுகின்றது. எனவே ... Read More »

காட்டு யானைத் தடுப்பு வேலிகளுக்கு மின் வழங்கும் செயலூக்கி திருட்டு : கிராம மக்கள் அச்சத்தில்!

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைத் தடுப்பு வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் செயலூக்கி  திருடப்பட்டுள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர். உன்னிச்சை தொடக்கம் கற்பானை வரையான நீண்ட வனப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வாழும் விவசாய குடிநிலப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காக காட்டோரங்களில் அமைக்கப்பட்ட மின்சார அதிர்ச்சித் தடுப்பு வேலிகளுக்கு ... Read More »