Monday , May 20 2019
Home / வவுனியா

வவுனியா

வவுனியா தாண்டிக்குளம் புகையிரதக்கடவை பாதுகாப்பற்ற நிலையில்!!

வவுனியா ஏ9 வீதியையும், காளிகோவில் வீதியையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள தாண்டிக்குளம் புகையிரக்கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடனே அதனூடாக பிரயாணிக்க வேண்டியுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் இப் புகையிரதக் கடவையானது கடந்த காலங்களில் புகையிரத கடவை அமைக்கப்பட்டதுடன் இதற்கான கடவை ஊழியரும் கடமையாற்றியிருந்தார். தற்போது இக்கடவை அகற்றப்பட்டு இங்கு ... Read More »

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு!

வவுனியாவில் நேற்று பிற்பகல் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஜ.பி.செனரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,  வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் தலைமையில் செயற்படும் வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவு பொலிசார் நேற்று பிற்பகல் 12 மணியளவில் எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் 4பேர் சட்டவிரோத மரக்கடத்திலில் ... Read More »

வவுனியாவிலுள்ள வடபகுதிக்கான எரிபொருள் விநியோக மையம் இராணுவக்கட்டுபாட்டில்!!

இன்று (26.07.2017) காலை இலங்கை பொற்றோலியக்கூட்டுத்தாபனம் அத்தியாவசிய தேவைக்கு உட்பட்டதாக வெளிவந்த வர்த்தகமானி அறிவித்தலையடுத்து இராணுவத்தினரிடம் இச் சேவை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு அமைவாக நாட்டிலுள்ள சகல எரிபொருள் விநியோக நிலையங்களை இன்று முதல் இராணுவம் பொறுப்பேற்று விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. இதையடுத்து வவுனியாவிலுள்ள வடபகுதிக்கான பிரதான எரிபொருள் விநியோக நிலையத்தினை இன்று (26.07.2017) 26 ... Read More »

வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் நாய் உயிரிழப்பு

    வவுனியா – ஶ்ரீராமபுரம் திருஞான சம்பந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இருந்து மீட்கப்பட்ட நீர் நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த நீர் நாய் நேற்றைய தினம் பாடசாலை வளாகத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதி கிராம அலுவலர் மூலம் பாடசாலை வளாகத்தில் நீர் நாய் ஒன்று நிற்பதாக வழங்கப்பட்ட ... Read More »

வவுனியாத் தமிழன் சைக்கிளில் 1515Km சாதனைப் பயணம்

இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம், 08.04.2017 சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு வவுனியா ஸ்ரீகந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது. இப் பயணத்திற்காக “சைக்கிளை” இவ்வாறு வடிவமைத்துள்ளார் வவுனியா ஆசிரியர் தர்மலிங்கம் பிரதாபன். தனியாக இவர் ஆரம்பித்துள்ள இப் பயணம் பலராலும் உன்னிப்பாக அவதானிக்கப் படுகிறது. முன்னர் திட்டமிட்ட படி 07.04.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்க இருந்த ... Read More »

வவுனியாவில் விசப் போத்தலுடன் வந்த தாய் போராட்டம்

யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்திருந்த தாய் ஒருவர் நீண்டகாலத்திற்கு பின்னர் நாடு திரும்பியுள்ள நிலையில், அவருடைய காணியில் மற்றுமொரு நபர்கள் குடியேறியுள்ளதாகம் தற்போது தனது காணியை அவர்கள் தர மறுப்பதாகவும் தெரிவித்து தாய் ஒருவர் தனது மகனுடன் இணைந்து விசப்போத்தலை வைத்துக்கொண்டு வவுனியா நகரில் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் ... Read More »

வவுனியாவில் இப்படி ஒரு செயலால் பெண் கைது!

வவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா சந்தை வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி இரண்டு தொலைபேசிகள் திருடப்பட்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா தீர்க்கப்படாத ... Read More »

புனர்வாழ்வு செயற்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய சுகாதார அமைச்சு தயார்

வடக்கு மாகாணத்திலுள்ள விசேட தேவையுடையோருக்கான புனர்வாழ்வு செயற்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன இணக்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரத்தவங்கி திறப்புவிழா நிகழ்வில், இரத்த வங்கியைத் திறந்துவைத்து உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வடமாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார ... Read More »

வவுனியா வீதியில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

வவுனியாவில் பல்வேறு இடங்களில் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு நகரசபையில் கட்டிவைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்ற மாடுகளை நகரசபை ஊழியர்களின் உதவியுடன் பிடிக்கப்பட்டு நகரசபையில் கட்டிவைக்கப்பட்டுள்ளது. 32 மாடுகள் கட்டாக்காலியாக வீதியில் நின்ற போது பிடிக்கப்பட்டுள்ளதாகவும் பூந்தோட்டம், கோவில்குளம் போன்ற பகுதிகிளில் வீதியில் படுத்திருந்த போது இவை பிடிக்கப்பட்டள்ளதாகவும் 13 ... Read More »

தொழிற் பயிற்சிக்காக வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் குவியும் இளைஞர்கள்

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இன்று மேசன் வேலை உள்ளிட்ட தொழிற்பயிற்சிக்கான பயிற்சிப்பட்டறை நடைபெறுவதால் இளைஞர் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வவுனியா நைற்றா நிறுவனம், தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்றும், நாளையும் இளைஞர்களுக்கான தொழில் பயிற்சிப்பட்டறை நடாத்தப்படுகின்றது. கட்டிட அமைப்பாளருக்கான (மேசன்) பயிற்சி பட்டறையில் முதற்கட்டமாக இன்று ... Read More »